• முயற்சி செய் ... வெற்றி உனதே ... தன்னம்பிக்கையை இழக்காதே ! லண்டனில் நடந்த நிஜ சம்பவம்

  Tuesday ,1 Aug 2017

  இதை செய்யாதே ... இதற்கு முயலாதே ... என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட கண்பார்வை குறைபாடுள்ள ஒருவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

  தன் 6 வயதில் ஈராக்கிலிருந்து குடும்பத்துடன் பிரிட்டன் வந்த அல்லன் ஹென்னஸிக்கு கண்களில் குறைபாடு. அவரை ஊக்குவிக்கவும் ஆள் இல்லை, இருப்பினும் தன் முயற்சியை கையாண்டார். வெற்றி கண்டார் அல்லன்.

  கல்லூரியின் முதல் நாள் வகுப்பறையில் புத்தகத்தின் மீது கண்களை உற்று நோக்கி படிக்க, நீ என்ன இந்த புத்தகத்தை நுகர்ந்து பார்க்கிறாயா ? என்று ஒரு மாணவர் கேட்டிருக்கிறார். அதற்கு அல்லன், இல்லை ... மூக்கால் படிக்கிறேன் என்று நகையோடு பதில் சொல்லியிருக்கிறார்.

  இருப்பினும், தன் படிப்பில் ஆர்வம் செலுத்தினார். பிற மாணவர்களை விடவும் தன்னம்பிக்கையுடன் படித்தார். முயற்சியை கைவிடாமல் தன் எண்ணங்களை நனவாக்கினார்.

  தற்போது கண்பார்வை குறைபாடுள்ள அல்லன் ஹென்னஸி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.