• அமெரிக்கர்கள் நிலாக்கு சென்றது ஒரு சாதனைன்னா ... அங்கு குப்பையை போட்டது அதவிட பெரிய சாதனை தான் !

  Thursday ,3 Aug 2017

  சிங்கம், புலி, சிறுத்தை, யானை என எவ்வளவோ மிருகங்கள் வாழும் காடுகள், பசுமையாகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது.

  ஆனால், நாம் கால் பதிக்கும் இடங்கள் நாளடைவில் குப்பை கூளமாக மாறிவிடுகிறது. அந்தவகையில் நிலாவைக்கூட நம்மவர்கள் விட்டு வைக்கவில்லை.

  1961 - 1972 வரை அமெரிக்கா, தன் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. அப்படி அனுப்பிய திட்டத்திற்கு பெயர் அப்பல்லோ திட்டம்.

  இதன்மூலமே 1969ல் அப்பல்லோ 11 ல் முதன்முறையாக நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் தரையிறங்கினார்.இதைத்தொடர்ந்து அப்பல்லோ 17 வரையான திட்டங்களில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் தொடர்ந்து நிலாவிற்கு சென்று வந்தனர். நிலாவிற்கு போய் வரும் போது ஞாபகார்த்தம் என்ற பெயரில் அங்குள்ள கற்கள், மண்ணை எடுத்து வந்தது ஒரு புறமிருந்தாலும் நிலாவில் விட்டுவந்த பொருட்கள் அதிகமே !

  அந்த வகையில் 70 நாடுகளில் தகவல்கள் அடங்கிய சிடி, அமைதியின் சின்னமாய் விளங்கும் ஆலிவ் இலை, நிலாவில் கோஃல்ப் விளையாடுகையில் தொலைந்த பந்துகள், சார்லஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் தன் குடும்ப புகைப்படம், யுனிவர்சிட்டி ஆப் மெக்சிகன் மாணவர்களின் போஸ்ட் கார்டு, புவியீர்ப்பு விசையை சோதித்த இறகு, சுத்தியல், ஸ்பேஸ் கிராஃப்டில் மிச்சமான மனிதனின் கழிவு, பூட்ஸ் இதுதவிர 6 அமெரிக்க கொடிகள் ! இவ்வாறு ஏகப்பட்ட பொருட்கள் நிலாவில் குப்பையாய் கிடைக்கிறதாம்.

  மனிதன் நிலாவிற்கு சென்றது ஒரு பக்கம் சாதனையாய் இருந்தாலும் அங்கு குப்பையை போட்டது மற்றொரு சாதனை தான் போல ...