• விளக்க முடியாத உணர்வுகள்

  விளக்க முடியாத உணர்வுகள்

  விளக்க முடியாத உணர்வுகளால்
  நிரப்புகிறாய் என்னை.
  அவை நிறைந்து தழும்பி
  பெருகையில்
  நான் மோசம் என்கிறாய்....
  இழுத்து போர்த்தியும்
  விடுவதாயில்லை
  இந்த குளிர்.
  உன்னுடன் சங்கமிக்கவே நிர்பந்திக்கிறது.
  இத்தனை காலத்தின்
  தவ வாழ்வை
  புரட்டி போடுகிறது
  உன் ஒற்றை விரல்.
  அடம்பிடிக்கும்
  உன் குழந்தைத்தனத்தை
  தாலாட்டி தூங்க வைப்பதில்
  களைத்து விடுகிறது
  என் அடங்கா ஆசைகள்.
  அயர்ச்சியில்
  கரம் பிடிக்கட்டும்
  என் தூக்கமும்
  கனவும்...
  -Sushma-