• என்தன் பசியை தீர்க்கவா....

  என்தன் பசியை தீர்க்கவா....

  விதைத்த விதையெல்லாம்
  வீனாய் போகயிலே
  கம்பீரமாய் முளைத்தாயோ
  கடனில் இருந்து காப்பாற்ற....
  பூமி மாதாவை கருவறையாய்
  கொண்டவளே
  என் கண்ணீரை துடைக்கவே
  கற்களை உடைத்து முளைத்தாயோ
  தந்தையாய் நான் இருப்பேன்
  தாகத்தை நான் தணிப்பேன்
  என்று தானோ முளைத்தாயோ
  உரம் என்ற பெயரில்
  விசத்தை போட்டு வளர்ப்பேன்
  என்று தெரிந்தும் முளைத்தாய்
  மனிதகுளம் மட்டும் இன்றி
  அனைத்து ஜீவனுக்கும்
  பசி என்ற அரக்கனை ஒடுக்கவே
  முளைத்தாயோ என்தன் வயலில்
  பிச்சை எடுப்பவனுக்கு தெரிந்தது
  உன்தன் பெருமை...
  பிச்சை போடுபவனுக்கு மறந்தது
  உன்தன் அருமை...
  நான் சாகும் முன்பாவது
  என்தன் பசியை தீர்க்கவா
  படயளாய் காட்ச்சி தந்தாய்
  என்தன் கனவில்
  இப்படிக்கு
  கண்ணீர் துளியுடன் விவசாயி
  -கி.பாண்டிய ராஜ்.